Wednesday, 7 April 2010

சீராட்டு, எசிலி, உப்புசம்

கீழே கொடுக்கப்பட்டுள்ளவை தன்னியல்பாக நினைவுக்கு வந்தவை. ஒத்த பொருள் அல்லது திணையில் தொகுக்கப்பட வில்லை.

சீராட்டு - கொங்கு நாட்டில் கோவித்துக் கொள்வதை சீராட்டு என்று கூறுவர். பெண் சீராட்டிக் கொண்டு வந்து விட்டால் கணவனிடம் கோவித்துக் கொண்டு வந்து விட்டாள் என்று பொருள்.

எசிலி போடுதல் - ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக் கொள்ளுதல். எ.கா. அண்ணனும் தம்பியும் எசிலி போட்டுக்கிறாங்க.

உப்புசம் - புழுக்கம்.

Thursday, 25 March 2010

உடல் உறுப்புகள்

பொடனி       -   பிடரி
பவுடு             -   தாடை
செவுனி        -   காது
மேலு            -   மேல்- உடல். உதா: மேலுக்கு சரியில்லை-உடம்பு சரியில்லை; மேலுக்கு ஊத்தீட்டு வா- உடம்பிற்கு குளித்துவிட்டு வா

நேரம் - காலம் - பொழுது

அப்பளையே    -  அப்போதே
பொழுதுக்கே   -   சூரிய உதயத்தின் போதே- விடியற்காலையிலேயே
பொழுதோட    -   சூரிய அஸ்தமனத்தின் முன்பே - இருளும் முன்
நேத்து வாரம்  -   கடந்த வாரம்
நாள(ளை) வாரம் -   அடுத்த வாரம்

Tuesday, 23 March 2010

குடும்ப உறுப்பினர் பெயர்கள்

ஆத்தா          -     அப்பா வழிப்பாட்டி; அப்பாவின் அம்மா
ஐயன்/ஐயா -     அப்பா வழித்தாத்தா;அப்பாவின் அப்பா
அம்முச்சி    -     அம்மா வழிப்பாட்டி;அம்மாவின் அம்மா
அப்புச்சி       -      அம்மா வழித்தாத்தா;அம்மாவின் அப்பா

நங்கையா       -  மனைவியின் அக்கா
கொழுந்தியா -  மனைவியின் தங்கை
மச்சினன்        -  மனைவியின் தம்பி/அண்ணன்